புதுடெல்லி: சர்வதேச டென்ட் பெக்கிங் தொடர் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 4 பேர் கொண்ட அணி 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றது.
சர்வதேச டென்ட் பெக்கிங் தொடர் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷ்யா, ஈரான், பெலாரஸ், குவைத், கத்தார், கஜகஸ்தான், சிரியா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 4 பேர் கொண்ட அணி 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் மோகித் குமார், தினேஷ் கங்காராம் கர்லேகர் ஆகியோர் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றினர். இவர்கள் இன்டல் லான்ஸ், ரிங் மற்றும் பெக், லெமன் மற்றும் பெக் பிரிவுகளில் பதக்கங்கள் வென்றனர்.
டென்ட் பெக்கிங் என்பது குதிரையேற்ற விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதில் சவாரி செய்பவர் இலக்கை நோக்கி ஒரு ஈட்டி அல்லது வாள் கொண்டு இலக்கைத் துளைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ