ரவி தாஹியா 
விளையாட்டு

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியா தகுதிச் சுற்றில் தோல்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவி தாஹியா ஆசிய மல்யுத்த விளையாட்டுக்கான தகுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் டெல்லி இந்திரா காந்தி அரேனா மைதானத்தில் நேற்று நடைபெற்றன.

இதில் இந்திய வீரர்கள் ரவி குமார் தாஹியா, அதிஷ் தோட்கர் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் அதிஷ் தோட்கர் 20-8 என்ற புள்ளிகள் கணக்கில் ரவி குமார் தாஹியாவை வீழ்த்தினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரவி தாஹியா இழந்துள்ளார்.

ரவி குமார் தாஹியா, 2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா சார்பில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

2018-ல் புகாரெஸ்டில் நடைபெற்ற உலக 23 வயதுக்குட்பட்டோர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை ரவி தாஹியா வென்றிருந்தார்.

2019-ம் ஆண்டில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ரவி தாஹியா, ஆசிய மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 3 முறை பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் அவர் தோல்வி அடைந்துள்ளது மல்யுத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

SCROLL FOR NEXT