அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வெள்ளிக்கிழமை) உயர்ந்து 64.72 ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தது. நேற்று வர்த்தக நேர இறுதியில், 65.32 ரூபாயாக இருந்தது.
பிரபல முதலீடு மற்றும் கடன் புள்ளி தர நிறுவனமான ‘மூடி’ இந்தியாவின் கரன்சி கையாளும் திறன் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. இதன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பு இன்று அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 பைசா உயர்ந்து 64.72 ஆக வர்த்தகமானது.