இந்திய அணி வீரர்கள் 
விளையாட்டு

பிஃபா தரவரிசை | 99-வது இடத்தில் இந்திய கால்பந்து அணி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 99-வது இடத்தை பிடித்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் இந்திய அணி இந்த அடைந்துள்ளது. இந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஷிப்பில் வலுவான லெபனான், குவைத் அணிகளை வென்று கோப்பையை வென்றிருந்தது இந்திய அணி.

தற்போது இந்திய கால்பந்து அணி 1208.69 புள்ளிகளுடன் உள்ளது. பிஃபா தரவரிசையில் அதிகபட்சமாக இந்திய அணி கடந்த 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை பிடித்திருந்தது. 1993-ம் ஆண்டு 99-வது இடத்தையும் 2017 மற்றும் 2018-ம் ஆண்டு 96-வது இடத்தையும் பிடித்திருந்தது. கடந்த மாதம் 100-வது இடத்தை எட்டிப்பிடித்திருந்த நிலையில் சீரான செயல்திறன் மூலம் தற்போது ஒரு இடம் முன்னேறி உள்ளது.

உலக சாம்பியனான அர்ஜெண்டினா முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் முறையே 2 முதல் 5-வது இடங்களில் உள்ளன.

SCROLL FOR NEXT