அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (செவ்வாய் கிழமை) சற்று உயர்ந்து 65.06 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்ந்தது. காலை நேர நிலவரப்படி, 65.06 ரூபாயாக இருந்தது.