விளையாட்டு

போத்தம் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்

செய்திப்பிரிவு

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் இயான் போத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் 68 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அந்த மைதானத்தில் தனிப்பட்ட வீரரின் சாதனையாக உள்ளது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் லார்ட்ஸில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வியாழக்கிழமை தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் மேலும் ஒரு விக்கெட் எடுத்தால் போத்தமின் சாதனையை சமன் செய்வார். அதன் பிறகு எடுக்கும் விக்கெட் மூலம் லார்ட்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

லார்ட்ஸ் மைதானத்தில் போத்தம் 8 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு இன்னிங்ஸில் 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது அவரது சிறப்பான சாதனையாகும்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 முறையே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்திய வீரர் ஜடேஜாவை பிடித்து தள்ளிய விவகாரத்தில் ஆண்டர்சன் மீதான ஐசிசி-யின் விசாரணை முடிய 14 நாட்கள் ஆகும் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டில் ஆண்டர்சன் களமிறங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது.

SCROLL FOR NEXT