சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி 
விளையாட்டு

மணிக்கு 565 கி.மீ. வேகத்தில் ஸ்மாஷ்: உலக சாதனை படைத்தார் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி

செய்திப்பிரிவு

பசாகா: மணிக்கு 565 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை அடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீரர் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி.

பேட்மிண்டனில் அதிவேகமோக பந்தை அடிக்கும் (ஸ்மோஷ்) கின்னஸ் உலக சாதனை முயற்சி கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஜப்பானின் சோகாவில் உள்ள யோனெக்ஸ் தொழிற்சாலை உடற்பயிற்சி கூடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடத்தப்பட்டது. இதில் பேட்மிண்டன் நட்சத்திர வீரர் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, மணிக்கு 565 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை அடித்து கின்னஸ் சாதனை படைத்தார். இது வேக அளவீட்டு முடிவுகளின அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நீதிபதிகளால் சரிபார்க்கப்பட்டது.

இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த பூன ஹியோங் மணிக்கு 493 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை அடித்தைலதை உலக சாதனையாக இருந்தது. 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி. அவரது ஸ்மாஷ் பார்முலா 1 காரின் வேகத்தை (மணிக்கு 372.6 கிலோ மீட்டர்) விட அதிகமாக பதிவாகி உள்ளது. மகளிர் பிரிவில் மலேசியாவின் டான் பியர்லி மணிக்கு 438 கிலோ மீட்டர் லேகத்தில் பந்தை அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

SCROLL FOR NEXT