விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கிரிக்கெட் உட்பட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகின்றன.

இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளை அனுப்பஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணிநேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா,ரிங்கு சிங், ஜிதேஷ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் (விக்கெட் கீப்பர்).

SCROLL FOR NEXT