சென்னை வந்த தோனி 
விளையாட்டு

சென்னையில் நலம் விசாரித்த ரசிகருக்கு ரெஸ்பான்ஸ் செய்த தோனி!

செய்திப்பிரிவு

சென்னை: தனது படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி.

சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் வழக்கம் போல திரளான ரசிகர்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு அளித்தனர். தங்களது மனதை கவர்ந்த தோனிக்கு பூக்களை வீசியும், ‘தோனி.. தோனி’ என முழக்கமிட்டும் வரவேற்றனர். தோனியும் சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். அந்த வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.

அவருக்கு அண்மையில் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஐபிஎல் 2023 சீசனை அந்த காயத்துடனே விளையாடி இருந்தார் தோனி. இந்நிலையில், விமான நிலையத்திற்குள் அவரை பின்தொடர்ந்து வந்த ரசிகர் ஒருவர், அது குறித்து அவரிடம் அன்புடன் நலம் விசாரித்துள்ளார். அந்த வீடியோ இப்போது கவனம் பெற்று வருகிறது.

“மாஹி பாய் (அண்ணா), உங்கள் மூட்டுப்பகுதி எப்படி உள்ளது?” என வீடியோவில் அந்த ரசிகர் கேட்கிறார். அதற்கு புன்னகையுடன் 'இப்போது பரவாயில்லை' என்பது போல கையசைத்து செல்கிறார் தோனி.

SCROLL FOR NEXT