பி.வி.சிந்து 
விளையாட்டு

கனடா ஓபன் பாட்மிண்டன் | அரை இறுதியில் பி.வி.சிந்து தோல்வி

செய்திப்பிரிவு

கல்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆடவர் பிரிவில் லக்‌ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடினார். இதில் லக்‌ஷயா சென் 21-17, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் 500 புள்ளிகள் கொண்ட தொடரில் லக்‌ஷயா சென் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். அவர், இறுதிப் போட்டியில் சீனாவின் லி ஷி பேங்குடன் மோதுகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார். இதில் சிந்து 14-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.

SCROLL FOR NEXT