“உங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி” என கூறி தனது இன்ஸ்டாகிராமில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டின் செல்லப் பிராணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். தானும் உண்டு செல்லப் பிராணிகளுக்கும் கேக்கை பகிரும் வீடியோவின் பின்னணியில் இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது.
இதற்கான கேப்ஷனில், “உங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி. என் பிறந்தநாளில் நான் என்ன செய்தேன் என்பது உங்கள் பார்வைக்காக” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு மணி நேரத்தில் 29 லட்சம் லைக்குகளை அள்ளியது. பலரும் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.