விளையாட்டு

கனடா ஓபன் பாட்மிண்டன் | 2-வது சுற்றில் இந்திய ஜோடி

செய்திப்பிரிவு

கல்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத் கரகா, விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத் கரகா, விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சலா ஜோடி, சீன தைபேவின் சென் ஹி ரே, லு சென் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் கிருஷ்ண பிரசாத், விஷ்ணுவர்தன் ஜோடி 21-14, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இந்தியாவின் பாருபள்ளி காஷ்யப் தகுதி சுற்றில் 17-21, 20-22 என்ற செட் கணக்கில் சீனாவின் லீ லேனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT