லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தொடரில் 0-2 என அந்த அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனும் பேட்டிங் வரிசையில் 3வது வீரராகவும் களமிறங்கும் ஆலி போப் காயம் காரணமாக தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பீல்டிங்கின் போது ஆலி போப்பிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதால் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார்.