கோப்புப்படம் 
விளையாட்டு

சென்னையின் எஃப்சி கால்பந்து அணியில் புதிதாக 2 வீரர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னையின் எஃப்சி அணியில் புதிதாக 2 வீரர்கள் இணைந்துள்ளனர்.

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எஃப்சி அணியில் டிபன்டர்களான அங்கித் முகர்ஜி, பிஜாய் சேத்ரி ஆகியோர் இணைந்துள்ளனர். அங்கித் முகர்ஜி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிக்காக 38 ஐஎஸ்எல் லீக் போட்டியில் விளையாடியுள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த பிஜாய் சேத்ரி முதன்முறையாக ஐஎஸ்எல் லீக் போட்டியில் விளையாடவுள்ளார். இவர் இதற்கு முன்பு சென்னை சிட்டி எஃப்சி அணிக்காக விளையாடி வந்தார்.

SCROLL FOR NEXT