விளையாட்டு

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் - ஸ்வியாடெக் விலகல்

செய்திப்பிரிவு

பேட் ஹாம்பர்க்: காய்ச்சல் காரணமாக பேட் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து முன்னணி டென்னிஸ் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் விலகியுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், அண்மையில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில்சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் ஜெர்மனியிலுள்ள பேட் ஹாம்பர்க் நகரில் நடைபெற்று வந்த ஹாம்பர்க் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தார்.

இந்நிலையில் காய்ச்சல் மற்றும்உணவு நச்சுத்தன்மை காரணமாகபோட்டியிலிருந்து விலகுவதாக இகா ஸ்வியாடெக் அறிவித்துள்ளார். நேற்று நடைபெறவிருந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இத்தாலி வீராங்கனை லூசியா பிரான்செட்டியுடன் அவர் மோதவிருந்தார். ஸ்வியாடெக் விலகியுள்ளதால், இறுதிச் சுற்றுக்கு லூசியா முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT