நாட்டிங்காம்: மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இஙகிலாந்து அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
நாட்டிங்காமில் நடைபெற்று வந்த இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 473 ரன்களும், இங்கிலாந்து அணி 463 ரன்களும் சேர்த்தன. 10 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 78.5 ஓவர்களில் 257 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
268 ரன்கள் இலக்குடன் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 49 ஓவர்களில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேனி வயாத் 54 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்களை சாய்த்தார். 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு ஆட்டம் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.