கிர்ஜியோஸ் 
விளையாட்டு

மலோர்க்கா டென்னிஸ் | கிர்ஜியோஸ் விலகல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காயம் காரணமாக மலோர்க்கா ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ் விலகியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் சான்டோ போசா நகரிலுள்ள மலோர்க்காவில், ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பிரதானச் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் பங்கேற்க விருந்தார். ஆனால் கடந்த வாரம் ஹாலேவில் நடைபெற்ற போட்டியின்போது நிக் கிர்ஜியோஸ் காயமடைந்தார். அந்தக் காயத்திலிருந்து அவர் குணமாகாத நிலையில் மலோர்க்கோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தக் காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள விம்பிள்டன் போட்டியிலும் நிக் கிர்ஜியோஸ் பங்கேற்பது சந்தேகம் என கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT