கோப்புப்படம் 
விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் மகளிருக்கான டி 20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் மகளிருக்கான டி 20 கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது.

மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட் போட்டியை உள்ளடக்கிய பிரத்யேக மகளிர் லீக் கடந்த 2018-ல் தொடங்கியது. இம்முறை இந்த தொடருக்காக தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் வீராங்கனைகள் தேர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் இருந்து சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த அணிகளுக்கு கிரீன் இன்வேடர்ஸ், சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ், யெல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்சு டிராகன்கள், பர்பிள் பிளேஸர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 8 அணிகளும் டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னையில் விளையாட உள்ளன. டி 20 தொடர் வரும் 26-ம் தேதிமுதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேவேளையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 1-ம் தேதி தொடகி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ இணை செயலாளர் சிவகுமார், கவுரவ பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், ஃப்ரேயர் நிறுவனத்தை சேர்ந்த ராஜன், கிரிக்கெட் ஆலோசனை குழுவைச் சேர்ந்த சுதா ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT