கீதாஞ்சலி நாக்வேகர் 
விளையாட்டு

தங்கம் வென்றார் இந்தியாவின் கீதாஞ்சலி

செய்திப்பிரிவு

பெர்லின்: சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப் பதக்கம் வென்றார்.

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் கீதாஞ்சலி நாக்வேகர் தங்கப் பதக்கம் வென்றார். இவர், கோவா மாநிலத்தை சேர்ந்தவர்.

ஆடவருக்கான பளுதூக்குதலில் இந்திய வீரர் விஷால் 4 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். அவர், ஸ்வாட் (122.50 கிலோ எடை), டெட்லிஃப்ட் (155), பெஞ்ச் பிரஸ் (85) ஆகிய பிரிவுகளில் அசத்தினார்.

ஒருங்கிணைந்த பிரிவிலும் விஷால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். 16 வயதான விஷால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

SCROLL FOR NEXT