பர்மிங்காம்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் அந்த அணி மொத்தமாக 280 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 281 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதே போல ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது.
சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. அதிகபட்சமாக அந்த அணிக்காக ஜோ ரூட் 46 ரன்கள், ஹாரி ப்ரூக் 46 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தனர். 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இதனால் ஆஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். இந்த இலக்கை எட்ட நான்காவது நாளின் கடைசி செஷன் மற்றும் ஐந்தாவது நாள் முழுவதும் ஆஸி. எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பவுலர்கள் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதுவும் போப் விக்கெட்டை கைப்பற்ற கம்மின்ஸ் வீசிய அந்த இன்-ஸ்விங்கிங் யார்க்கர் அபார ரகம்.