முரளி ஸ்ரீசங்கர் 
விளையாட்டு

தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 8.41 மீட்டர் நீளம் தாண்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார் முரளி ஸ்ரீசங்கர்

செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 8.41 மீட்டர் நீளம் தாண்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார் முரளி ஸ்ரீசங்கர்.

மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் கேரளாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் 8.41 மீட்டர் நீளம் தாண்டி தகுதி சுற்றில் முதலிடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தகுதி சுற்றில் ஸ்ரீசங்கர் 8.41 மீட்டர் நீளம் தாண்டியதன் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தொடருக்கு தகுதி பெறுவதற்கு 8.25 மீட்டர் நீளம் தாண்டினால் போதுமானது.

24 வயதான ஸ்ரீசங்கரின் பாய்ச்சல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெஸ்வின் ஆல்ட்ரினின் என்ற தேசிய சாதனையை (8.42 மீட்டர்) விட ஒரு சென்டிமீட்டர் குறைவாக இருந்தது. அதேவேளையில் தனது சொந்த தேசிய சாதனையையும் தகர்த்துள்ளார். 2022ம் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் ஸ்ரீசங்கர் 8.23 மீட்டர் நீளம் தாண்டி இருந்தார்.

இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் ஸ்ரீசங்கருடன், ஜெஸ்வின் ஆல்ட்ரின், முஹம்மது அனீஸ் யாஹியா உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கின்றனர். ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி சுற்றில் 7.83 மீட்டர் நீளமும், முஹம்மது அனீஸ் யாஹியா 7.71 மீட்டர் நீளமும் தாண்டினர்.

SCROLL FOR NEXT