ஆலிவர் ஒயிட்ஹவுஸ் 
விளையாட்டு

ஒரே ஓவரில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சிறுவன்

செய்திப்பிரிவு

லண்டன்: ஒரு பந்து வீச்சாளர் கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் ஹாட்ரிக் சாதனையை அடைவது உண்மையில் அரிதான நிகழ்வாகும், ஆனால் ஒரு வீரர் 'டபுள் ஹாட்ரிக்' பெற முடிந்தால் அந்த சாதனை இன்னும் அசாதாரணமாகிறது. அப்படி ஒரு சாதனையை இங்கிலாந்தில் உள்ள புரூம்ஸ்க்ரோவ் கிளப் அணியின் 12 வயது வீரரான ஆலிவர் ஒயிட்ஹவுஸ் படைத்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் குக்ஹில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆச்சரியமான ஓவரில், ஆலிவர் ஒயிட்ஹவுஸ் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனை படைத்தார். இருப்பினும், அவரது விதிவிலக்கான செயல்திறன் அத்துடன் நின்றுவிடவில்லை. தனது 2-வது ஓவரில் மேலும் இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் ஆலிவர்.

இந்த ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசிய ஆலிவர் ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். ஆலிவரின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆலிவரின் தாய் வழி பாட்டி 1969ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அன் ஷெர்லி ஜோன்ஸ் ஆவார்.

SCROLL FOR NEXT