ஹெச்.எஸ்.பிரனோய் 
விளையாட்டு

இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் ஹெச்.எஸ்.பிரனோய்

செய்திப்பிரிவு

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 9-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 4-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவை எதிர்த்து விளையாடினார். 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனோய் 21-18, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 22-ம்நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், 10-ம் நிலை வீரரான சீனாவின் லி ஷி பெங்குடன் மோதினார். ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் காந்த் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-13 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் ஃபஜர் அல்பியன், முஹம்மது ரியான் ஆர்டியன்டோ ஜோடியை வீழ்த்தியது.

SCROLL FOR NEXT