மெடலின்: உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3-ல் இந்திய அணி ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.
கொலம்பியாவின் மெடலின் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது.
இதில் துஷார் ஷெல்கே, மிருனாள் சவுகான், தீரஜ் பொம்மதேவரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 5-3 என்ற கணக்கில் யாங் கேயங், லி மெங்குயி, வாங் யன் ஆகியோரை உள்ளடக்கிய சீனா அணியை வீழ்த்தியது.