கே.எல்.ராகுல் | கோப்புப்படம் 
விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகாடமியில் கே.எல்.ராகுல்!

செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல்.ராகுல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்திறனை தகவமைக்கும் வகையில் பயற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

31 வயதான ராகுல், அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி இருந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் அவர் விலகினார். அவருக்கு வலது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு காயம் ஏற்பட்ட பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான தகவலை சமூக வலைதள பதிவு மூலம் ராகுல் பகிர்ந்திருந்தார். எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட கே.எல்.ராகுல் உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்திறன் சார்ந்த பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT