விலங்குகளை வேட்டையாடுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சிந்து.
விலங்குகள் நல அமைப்பான பெட்டா இந்தியாவுடன் இணைந்து அவர் இது தொடர்பான விளம்பரத்தில் தோன்றியுள்ளார். பிஸ்டல் சூட்டிங்கில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஹீனா. தனது பிரச்சாரம் குறித்து அவர் கூறியுள்ளது: வேட்டையாடுவது என்பது விலங்குகள் மீது மனிதர்கள் நடத்தும் கொடூரச் செயல். முக்கியமாக சிங்கம், சிறுத்தை, காண்டா மிருகம், யானை போன்ற விலங்குகள் தோலுக்காகவும், தந்தத்துக்காவும் சுட்டுக் கொல்லப்படுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று ஹீனா கூறியுள்ளார்.-பிடிஐ