விளையாட்டு

WTC Final | இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 100% அபராதம் விதிப்பு: ஷுப்மன் கில்லுக்கு கூடுதலாக 15% அபராதம்

செய்திப்பிரிவு

துபாய்: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அனைத்து வீரர்களுக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக வித்துள்ளது ஐசிசி.

லண்டனில் நடைபெற்ற ஐசிசிஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச இந்திய அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இந்திய அணி 5 ஓவர்களை குறைவாக வீசி உள்ளது. ஐசிசி விதிகளின் படி ஒரு ஓவருக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டும்.

அந்த வகையில் 5 ஓவர்களுக்கு 100 சதவீதம் என இந்திய அணி வீரர்களின் முழு ஊதியத்தையும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. அதேவேளையில் தொடக்க வீரரான ஷுப்மன் கில், நடுவரின் முடிவை விமர்சித்ததால் அவருக்கு கூடுதலாக 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விளையாடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் போட்டி ஊதியமாக தலா ரூ.15 லட்சம் பெறுகின்றனர்.அதேவேளையில் ரிசர்வ் வீரர்கள்ரூ.7.5 லட்சம் பெறுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியும் பந்து வீச அதிகம் நேரம் எடுத்துக் கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணி 4 ஓவர்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் குறைவாக வீசியதால் ஊதியத்தில் 80% அபராதம் செலுத்த வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT