தோனியுடன் ஹர்பஜன் சிங் | கோப்புப் படம். 
விளையாட்டு

WTC Final | ஆம், அப்போது அவர் மட்டும்தான் இந்தியாவிலிருந்து விளையாடினார் - தோனி ரசிகரை சாடிய ஹர்பஜன்

செய்திப்பிரிவு

20 - 20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்போது தோனி மட்டும்தான் இந்தியாவிலிருந்து விளையாடினார் என்று குறிப்பிட்டு தோனி ரசிகரை ட்விட்டரில் சாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

தோனிக்குப் பிறகு வந்த இந்திய கேப்டன்கள் ஐசிசி கோப்பையை வெல்வது என்பது கடந்த சில வருடங்களாக கனவாக இருந்து வருகிறது. WTC இறுதிப் போட்டியிலும் அதுதான் தொடர்ந்தது. தோல்வியைத் தொடர்ந்து தோனியைப் பாராட்டி பல பாராட்டுகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. குறிப்பாக தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டனர்.

இந்த நிலையில் தோனி ரசிகர் ஒருவரது பதிவை குறிப்பிட்டு ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆமாம், அப்போது அந்த போட்டிகள் நடக்கும்போது அந்த இளைஞர் மட்டும்தான் இந்தியாவிலிருந்து விளையாடினார். மற்றவர்கள்யாரும் விளையாடவில்லை. தனியாகவே அவர் உலக கோப்பைகளை வென்றார்..இதில் முரண் என்னவென்றால் ஆஸ்திரேலியா அல்லது பிற நாடுகள் உலகக் கோப்பையை வெல்லும்போது ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது என்றுதான் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வரும். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்றால் கேப்டன் வெற்றி பெறுவதுதான் அணி விளையாட்டு என்று கூறப்படுகிறது. ஒன்றாக வெல்வோம் ஒன்றாக தோற்போம்..” என்று பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில் அணியின் வெற்றிக்கு கேப்டனை மட்டுமே குறிப்பிடக் கூடாது என்று கூறும் ஹர்பஜன் WTC இறுதிப் போட்டியில் வென்ற அஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்ஸை குறிப்பிட்டே வாழ்த்து தெரிவித்துள்ளர். தற்போது ஹர்பஜன் என்ன சொல்வார் என்று தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT