பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இன்று போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக். குடியரசு வீராங்கனை கரோலின் முச்சோவா மோதவுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் செக். குடியரசின் கரோலினா முச்சோவாவும், பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலெங்காவும் மோதினர். இதில் முச்சோவா 7-6, 6-7, 7-5 என் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் இகா ஸ்வியாடெக்கும், பிரேசில் வீராங்கனை ஹடாட் மியாவும் மோதினர். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் பட்டம் வெல்வதற்காக முச்சோவாவும், இகா ஸ்வியாடெக்கும் பலப்பரீட்சையில் இறங்கவுள்ளனர்.
கரோலின் முச்சோவா குறித்து இகா ஸ்வியாடெக்: "செக். குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவின் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். எதையும் செய்து காட்டக்கூடிய திறமை அவருக்கு உண்டு. சமீப காலமாக அவர் மிகச்சிறந்த டென்னிஸ் ஆட்டங்களை விளையாடியுள்ளார்" என இகா ஸ்வியாடெக் தெரிவித்துள்ளார்.