லண்டன்: இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்த இறுதிப் போட்டிக்கு இந்திய அணி கடந்த பாதை குறித்து பார்ப்போம்.
இங்கிலாந்தில் சமன்
2021 ஆகஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என தொடர் சமனில் முடித்தது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் 2022-ம் ஆண்டு ஜூலையில் நடைபெற்றது. இந்தியா 2-1 என முன்னிலை வகித்த நிலையில் கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் தொடர் சமநிலையை எட்டியது.
நியூஸி.யுடன் ஆதிக்கம்
நியூசிலாந்துடனான 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் டிரா ஆனது. அடுத்த ஆட்டத்தில் அஸ்வின் சுழலால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
தென்னாப்பிரிக்காவில் வீழ்ச்சி
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றது. எஞ்சிய 2 டெஸ்ட்களில் தோற்றது.
இலங்கையை நொறுக்கியது
2022ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது.
வங்கதேசத்தில் அசத்தல்
வங்கதேசத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, 2 டெஸ்டிலும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
ஆஸி. சவால்
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் ஆஸ்திரேலிய அணியுடன் உள்நாட்டில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.