கம்மின்ஸ் மற்றும் ரோகித் 
விளையாட்டு

WTC Final | நேரலையில் தொலைக்காட்சி, ஸ்ட்ரீமிங் தளத்தில் ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

செய்திப்பிரிவு

சென்னை: வரும் புதன்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி மதியம் 3 மணி அளவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் தொடரை வென்று சுமார் 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என ஐசிசி நடத்தும் தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என விளையாடினாலும் சாம்பியன் பட்டம் வெல்ல தவறியுள்ளது. இந்த சூழலில் இந்த முறை இந்திய அணி ஐசிசி நடத்தும் இந்தப் போட்டியை வெல்லும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நேரலையில் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் இந்தியா நெட்வொர்க் பெற்றுள்ளது. அதன்படி தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலி மற்றும் வலைதளத்தில் போட்டி ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தின் குறைந்தபட்ச சந்தா ரூ.149 என உள்ளது. இது மூன்று மாத கால சந்தாவாகும். அந்த சந்தா காலாவதி ஆவதற்குள் பயனர்கள் தங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தின் சேவை வேண்டாமெனில் 'Unsubscribe' செய்ய வேண்டும். இல்லையெனில் ஆட்டோ பில்லிங் முறையில் வங்கி கணக்கில் இருந்து சந்தா கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

SCROLL FOR NEXT