பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 94ம் நிலை வீரரான பெருவின் ஜூவன் பாப்லோ வரிலாஸை எதிர்த்து விளையாடினார்.
ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் கால் இறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெறுவது இது 17வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை கால் இறுதி சுற்றில் கால் பதித்திருந்த ஸ்பெயினின் ரபேல் நடாலின் சாதனையை சமன் செய்துள்ளார் ஜோகோவிச்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 28-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுகிறார் 333-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா. 3 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அனஸ்டசியா பாவ்லிசென்கோவா 3-6, 6-7 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.