மும்பை: சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் திருமணம் கோலாகலமாக நடந்தது.
உத்கர்ஷா பவார் என்பவரை ருத்துராஜ் இன்று (ஜூன் 4) மணந்தார். உத்கர்ஷா பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஆவார்.
திருமணத்தைத் தொடர்ந்து, புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருத்துராஜ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தவான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ருத்துராஜுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வில் ஷிவம் துபே உள்ளிட்ட சில சிஎஸ்கே வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சமூகவலைதள பக்கமும் ருத்துராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காராக உள்ள ருத்துராஜ் அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.