கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சசித்லு கடற்கரையில் இந்தியன் ஓபன் சர்பிங் (அலைச்சறுக்கு) 4-வது சீசன் போட்டி நேற்று தொடங்கியது. இதில் அலைகளின் மீது சீறிப்பாய்ந்த சென்னை வீரர் கிஷோர் குமார். 
விளையாட்டு

அலைச்சறுக்கில் கிஷோர் அசத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சசித்லு கடற்கரையில் இந்தியன் ஓபன் சர்பிங் (அலைச்சறுக்கு) 4-வது சீசன் போட்டி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தொடக்க நாளில் குரூம்ஸ் (16 வயதுக்குட்பட்டோர்) பிரிவில் சென்னையை சேர்ந்த கிஷோர் குமார் தனது செயல்திறனால் அனைவரையும் வியக்கவைத்தார். முதல் நாளில் அவர், 12.67 புள்ளிகளை குவித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவருக்கான ஓபன் பிரிவில் தயின் அருண் 10.83, தினேஷ் செல்வமணி 9.53, சேகர் பிச்சை 9.0, ஹரிஷ் 8.63, எம்.செல்வம் 8.53 புள்ளிகள் சேர்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். மழை மற்றும் அதிக காற்று காரணமாக மகளிருக்கான ஓபன் பிரிவு அரை இறுதி போட்டி நடைபெறவில்லை. இந்த போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிஷோர் குமார் கூறும்போது, “இது எனது சிறந்த செயல்திறன் இல்லை. ஏனெனில் சென்னையை விட இங்கு அலைகள் வித்தியாசமாக இருந்தன. நிலைமைகள் மிகவும் சவாலானவையாக இருந்தன. எனினும் என்னால் சிறந்த புள்ளிகள் எடுக்க முடிந்தது, அரையிறுதிக்கு முன்னேறியதில் திருப்தி அடைகிறேன். 2-வது நாளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT