ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதையொட்டி வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்.

 
ஆன்மிகம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி நடக்கிறது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வேளாங்​கண்ணி ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா நேற்று லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் மத்​தி​யில் கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாகத் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி செப்​.7-ம் தேதி நடை​பெற உள்​ளது.

நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா ஆண்​டு​தோறும் ஆக.29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி செப்​.8-ம் தேதி வரை நடை​பெறும். அதன்​படி, நடப்​பாண்டு விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முன்​ன​தாக பேராலய வளாகத்​தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை புனிதம் செய்து வைத்​தார். அதைத்​தொடர்ந்து புறப்​பட்ட கொடி ஊர்​வலம் கடைவீதி, கடற்​கரை, ஆரிய​நாட்​டுத் தெரு வழி​யாகச் சென்று மீண்​டும் பேரால​யம் வந்​தடைந்​தது.

அங்கு திரண்​டிருந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் முன்​னிலை​யில் கொடிக்​கம்​பத்​தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் கொடியை ஏற்​றி​னார். அப்​போது அங்கு கூடி​யிருந்த பக்​தர்​கள் ‘மரியே வாழ்க’ என விண்​ண​திர முழக்​கமிட்​டனர். தொடர்ந்​து, வாணவேடிக்கை நடை​பெற்​றது. பின்​னர் திருத்தல கலை​யரங்​கில் மாதா மன்​றாட்​டு, நற்​கருணை ஆசி, தமிழில் திருப்​பலி நிறைவேற்​று​தல் ஆகியவை நடை​பெற்​றன. இதில் பேராலய அதிபர் இருதய​ராஜ், பங்​குத் தந்​தைகள், அருட் சகோ​தரி​கள் உள்​ளிட்டோர் பங்​கேற்​றனர்.

இன்று (ஆக.30) முதல் செப்​.7-ம் தேதி வரை தின​மும் காலை 5 மணிக்கு பேரால​யம், விண்​மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல்​கோ​யில், கீழ்​கோ​யில் ஆகிய இடங்​களில் வழி​பாடு​கள், திருப்​பலிகள் நடை​பெறும். தமிழ், மராத்​தி, ஆங்​கிலம், கொங்​க​னி, கன்​னடம், தெலுங்​கு, இந்​தி, கிழக்​கத்​திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்​பலிகள் நடை​பெறும். மேலும் 8-ம் தேதி விண்​மீன் ஆலயத்​தில் அன்​னை​யின் பிறந்த நாள் கொண்​டாடப்​படு​கிறது.

இதையொட்டி சிறப்பு திருப்​பலி நிறைவேற்​றப்படு​கிறது. தொடர்ந்து, கொடி​யிறக்​கம் செய்யப்​பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்​னிட்டு 4 மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர்​கள் தலை​மை​யில் 2,432 காவலர்​கள், 378 போக்​கு​வரத்து காவலர்​கள் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். 24 மணி நேர​மும் இயங்​கும் கட்​டுப்​பாட்டுஅறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT