திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப் படும் ஆயிரம் மீட்டர் காடாத் துணி, மாட வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 
ஆன்மிகம்

கார்த்திகை தீபத் திருவிழாவால் களைகட்டியது திருவண்ணாமலை: 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை மகா தீபம்

லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை/சென்னை: அண்​ணா​மலை​யார் கோயி​லில் நாளை அதி​காலை பரணி தீபம் ஏற்​றப்​படு​கிறது. இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படு​கிறது.

திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் ஆண்​டுதோறும் நடை​பெறும் கார்த்​திகை தீபத் திரு​விழா உல​கப் பிரசித்த பெற்​றது. இந்த ஆண்டு கார்த்​திகை தீபத் திரு​விழா நவ.15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் மகா தேரோட்​டம் நடந்​தது.

திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான மகா தீபம் ஏற்​றும் வைபவம் நாளை (24-ம் தேதி) நடை​பெறுகிறது. இதை​யொட்டி சுவாமி சன்​னதி​யில் நாளை அதி​காலை 4 மணிக்கு ஏகன் அநேகன் எனும் தத்​து​வத்தை உணர்த்​தும் வகை​யில் பரணி தீபம் ஏற்​றப்​படு​கிறது. மாலை 6 மணிக்கு கோயிலுக்​குப் பின்​புறம் உள்ள 2,668 அடி உயர​முள்ள மலை உச்​சி​யில் ஜோதி வடிவ​மான மகா தீபம் ஏற்​றப்​படு​கிறது. தீபத் திரு​விழாவையொட்டி திரு​வண்​ணாலை நகரம் முழு​வதும் களைகட்​டியுள்​ளது.

மகா தீபம் ஏற்ற பயன்​படுத்​தப்​படும் ஆயிரம் மீட்​டர் காடாத் துணி, மாட வீதி​யில் ஊர்​வலமாகக் கொண்டு வரப்​பட்டு கோயி​லில் சம்​பந்த விநாயகர் சன்​னதி​யில் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன. மகா தீபத்தை தரிசனம் செய்ய நாட்​டின் பல்​வேறு பகுதி​களில் இருந்து லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதை​யொட்டி அண்​ணா​மலை​யார் கோயில் மற்​றும் மாநகரில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த ஆண்டு தீபத் திரு​விழா​வின்​போது பக்​தர்​கள் மலை ஏறு​வதற்கு மாவட்ட நிர்​வாகம் தடை விதித்​துள்​ளது. காலை​யில் நடை​பெறும் பரணி தீபத்​துக்கு 5,500 பக்​தர்​களும், மாலை மகா தீபத்​துக்கு 8,500 பக்​தர்​களும் அனுமதிக்​கப்​பட உள்​ளனர். தீப திரு​விழாவையொட்டி 15,500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர்.

3 ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி: இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

திரு​வண்​ணா​மலை அருணாச்​சலேஸ்வரர் கோயி​லில் நடை​பெறவுள்ள கார்த்​திகை தீபத் திரு​விழாவை முன்​னிட்டு, மொத்​தம் 3 ஆயிரம் பக்​தர்​களுக்கு இலவச அனுமதிச் சீட்​டுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ஆண்டு புதிய முன்​னெடுப்​பாக, திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த உள்​ளூர் பொது​மக்​களும் தீபத் திரு​விழா​வின்​போது சுவாமி தரிசனம் செய்​யும் வகை​யில் 1,500 அனுமதிச் சீட்​டுகள் அவர்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளன.

மீதமுள்ள 1,500 அனுமதிச் சீட்​டுகள் பிற மாவட்​டங்​களைச் சேர்ந்த பக்​தர்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. தேர்வு செய்​யப்​பட்ட பக்​தர்​களின் செல்​போன் எண்​களுக்கு குறுஞ்​செய்தி வாயி​லாக இணை​ய​வழி அனுமதிச் சீட்​டைப் பெறு​வதற்​கான இணைப்பு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT