ஆன்மிகம்

ஏழுமலையானின் டாலர்கள் ஆன்லைனில் விரைவில் விற்பனை

செய்திப்பிரிவு

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசிக்​கும் பக்​தர்​கள் அவர​வர் வசதி​களுக்​கேற்ப திரு​மலை​யில் லட்டு பிர​சாதங்​கள், காலண்​டர்​கள், டைரி​கள், தேவஸ்​தான ஊதுபத்​தி​கள், கையில் கட்டும் கயிறுகள் என வீடு​களுக்கு வாங்கி செல்​வதை வழக்​க​மாக கொண்​டுள்​ளனர்.

முன்​பெல்​லாம் தங்​கம் மற்​றும் வெள்ளி டாலர்​கள் கூட திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான புத்தக விற்​பனை மையங்​களில் விற்​பனை செய்​யப்​பட்டு வந்​தன. அவை சில காரணங்​களால் நிறுத்தி வைக்கப்​பட்​டன. ஆனால், சில பக்​தர்​கள் ஏழு​மலை​யான் மற்​றும் பத்​மாவதி தாயார் உரு​வம் பதித்த டாலர்​களை மீண்​டும் விற்க வேண்​டும் என திருப்​பதி தேவஸ்​தானத்தை வலி​யுறுத்தி வந்​தனர்.

          

அவர்​களின் வேண்​டு​கோளுக்கு இணங்க தங்​கம் மற்​றும் வெள்ளி டாலர்​கள் மற்​றும் நாண​யங்​களை ஆன்​லைனில் விற்​பனை செய்ய தேவஸ்​தானம் தற்​போது முன்வந்​துள்​ளது. ஆனால், தற்போது தங்​கம் விற்​கும் விலையில் தங்க டாலர்​களை வாங்க இயலாது என்றும், ஆனால், வெள்ளி டாலருக்கு தங்க முலாம் பூசியும் கூட ஆன்​லைனில் விற்க வேண்​டும் எனவும் சில பக்தர்கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

இதற்​கும் தேவஸ்​தானம் சம்​ம​தித்​துள்​ள​தாக தெரி​கிறது. ஆக, விரை​வில் திருப்​பதி ஏழு​மலை​யான் ஒரு​புறம், பத்​மாவதி தாயார் ஒரு​புறம் உள்ள தங்​கம், வெள்ளி மற்​றும் தங்க முலாம் பூசப்​பட்ட வெள்ளி நாண​யங்​கள், 5 மற்​றும் 10 கிராம் எடை​யில் ஆன்​லைன் மூலம் பக்​தர்​களின் வீடு தேடி வர உள்​ளது என்​பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT