ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், திருப்பதி திருக்குடை ஊர்வலம், பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயில் அருகே நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

 
ஆன்மிகம்

சென்னையில் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் திருப்பதி திருக்​குடை ஊர்​வலம் நேற்று தொடங்​கியது. திரு​மலை திருப்​பதி பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஏழு​மலை​யானுக்கு திருக்​குடைகள் உபய​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை பூக்​கடை சென்ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் 22-ம் ஆண்டு திருக்​குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடை​பெற்​றது.

11 வெண்​பட்​டுக் குடைகளுக்​கும் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்ட பிறகு, திருக்​குடைகள் ஊர்​வலத்தை கர்​நாடக மாநிலம் தீர்த்​தஹள்ளி ஸ்ரீ பீமனக்​கட்டே மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீரகு​வரேந்​திர தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து ஆசி​யுரை வழங்​கி​னார்.

அவர் பேசும்​போது, “200 ஆண்​டாக நடந்து வரும் இந்த உற்​சவம், நடு​வில் சிறிது காலம் நின்​று​விட்​டது. அதற்கு புது வடிவத்தை கோபால்ஜி கொடுத்​துள்​ளார்” என்​றார். ஹிந்து தர்​மார்த்த சமிதி அறங்​காவலர் ஆர்​ஆர்​.கோ​பால்ஜி பேசி​ய​போது, “மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் திரு​விழா​போல, சென்​னை​யில் திருக்​குடை வீதிஉலா நடை​பெறுகிறது.

600-க்​கும் அதி​க​மான இடங்​களில் திருக்​குடைகளுக்கு வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது” என்​றார். இந்த நிகழ்​வில், விஷ்வ ஹிந்து வித்யா கேந்​திரா பொதுச் செய​லா​ளர் கிரிஜா சேஷாத்​திரி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்​நாடு பொருளாளர் சசிக்​கு​மார், இணை பொதுச் செய​லா​ளர் ராமசுப்​பு, ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் அகில பாரத மக்​கள் தொடர்பு இணை பொறுப்​பாளர் சுனில் தேஷ் பாண்டே உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்த ஸ்ரீரகுவரேந்திர தீர்த்த சுவாமிகள், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி.

பின்​னர், என்​எஸ்சி போஸ் சாலை, கோவிந்​தப்ப நாயக்​கன் தெரு சந்​திப்​பு, பைராகி மடம், வால்​டாக்ஸ் சாலை வழி​யாக சென்று திருக்​குடைகள் கவுனி தாண்​டின. வழிநெடு​கிலும் ஏராள​மான பக்​தர்​கள் திரண்​டு, திருக்​குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்​டனர்.

தொடர்ந்​து, பல்​வேறு பகு​தி​களைக் கடந்து செல்​லும் குடைகள் இன்று இரவு வில்​லி​வாக்​கம் சவுமிய தாமோதரப் பெரு​மாள் கோயி​லிலும், நாளை இரவு திரு​முல்​லை ​வா​யில் வெங்​கடேஸ்​வரா பள்​ளி​யிலும் தங்​கு​கின்​றன.

18-ம் தேதி திரு​மலை திருப்​ப​தி​யில் தேவஸ்​தான அதி​காரி​கள் முன்​னிலை​யில்​, ஏழு​மலை​யானுக்​கு திருக்​குடைகள்​ சமர்​ப்​பணம்​ செய்​யப்​பட உள்​ளன.

SCROLL FOR NEXT