ஆன்மிகம்

ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் நாளை டிக்கெட்

செய்திப்பிரிவு

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யானை வரும் ஜனவரி மாதம் ஆங்கில புத்​தாண்​டில் பக்​தர்​கள் தரிசனம் செய்ய நாளை (19-ம் தேதி) திருப்​பதி தேவஸ்​தானம் ஆன்​லைன் மூலம் இணை​யத்​தில் டிக்​கெட்​டு​களை வெளி​யிடு​வ​தாக அறி​வித்​துள்​ளது.

அதன்​படி, 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை, பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் சுப்​ர​பாதம், தோமாலை சேவை, அர்ச்​சனை, அஷ்டதள பாத பத்​மா​ராதனை சேவை போன்ற ஆர்​ஜித சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். 22-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், ஊஞ்​சல் சேவை, ஆர்​ஜித பிரம்​மோற்​சவம், சகஸ்ர தீப அலங்​கார சேவை​களுக்​கான டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவச​மாக அங்​கபிரதட்சன டோக்​கன்​களும், 11 மணிக்கு ​வாணி அறக்​கட்​டளைக்​கான டிக்​கெட்​டு​களும், அதே நாள் மதி​யம் 3 மணிக்​கு, மாற்று திற​னாளி பக்​தர்​கள் மற்​றும் மூத்த குடிமகன்​களுக்​கான சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​களை சம்​மந்​தப்​பட்ட பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஜனவரி மாதத்​துக்​கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்​கெட்​டு​களை பக்​தர்​கள் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம். இதனை தொடர்ந்​து, அதே நாள் மதி​யம் 3 மணிக்கு தங்​கும் அறை​களுக்​கான டிக்​கெட்​டு​களை​யும் பக்​தர்​கள் முன்ப​திவு செய்து கொள்​ளலாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT