திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் தமிழக அமைச்சர்கள் ரமேஷ், கீர்த்தனா, ஸ்ரீநாத், மதன் ராஜா, பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
ஆன்மிகம்

இந்து அறநிலையத்துறையின் சிறப்பான ஏற்பாடுகளால் திருச்செந்தூரில் விமரிசையாக நடந்த சூரசம்ஹாரம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: இந்து அறநிலை​யத்​துறை​யின் சிறப்​பான ஏற்​பாடுகளால் திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்​ஹார விழா சிறப்பாக நடந்தது.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் சூரசம்​ஹாரத்தை முன்​னிட்டு, பக்​தர்​கள் வசதிக்​காக கோயில் வளாகத்​தில் 11 இடங்​களில் தற்​காலிக தகரக் கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. இவற்​றில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தங்கி விரதமிருந்​தனர். சிறு​வர் முதல் பெரிய​வர்​கள் வரை காலை​யிலேயே கடற்​கரைக்கு வந்து சூரசம்​ஹாரத்தை காண இடம்​பி​டித்து அமர்ந்​திருந்​தனர். மதி​யத்​துக்கு மேல் கடற்​கரையில் கூட்​டம் அதி​கரிக்க தொடங்​கியது.

மாலை 4 மணி​யளவில் சூரசம்​ஹாரம் நிகழ்ச்சி தொடங்​கிய போது லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கடற்​கரையில் குவிந்​திருந்​தனர். இத​னால் மணல் பரப்பே தெரியாத அளவுக்கு கடற்​கரையெங்​கும் மனித தலைகளாக காட்​சி​யளித்​தன.

பக்​தர்​களின் வசதிக்​காக ஆங்​காங்கே அன்​னதானம், குடிநீர், குளிர்​பானம் உள்​ளிட்​டவை பல்​வேறு அமைப்​பு​கள் சார்​பில் விநியோகம் செய்​யப்​பட்​டன. தனியார் வாக​னங்​களை நிறுத்​து​வதற்​காக 12 இடங்​களில் தற்​காலிக வாகன நிறுத்​து​மிடங்​கள் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தன. கோயில் பிரகாரம், பக்​தர்​கள் தங்​கும் தற்​காலிக கொட்​டகைகள் என 22 இடங்​களில் பெரிய எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்டு சூரசம்​ஹாரம் நிகழ்வு நேரடி​யாக ஒளிபரப்​பப்​பட்​டது.

கோயில் வளாகத்தை சுற்றி 150 இடங்​களில் தற்​காலிக சிசி​டிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு போலீ​ஸார் கண்​காணித்​தனர். நகருக்கு வெளியே 3 தற்​காலிக பேருந்து நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. வாகன நிறுத்​து​மிடங்​கள் மற்​றும் தற்​காலிக பேருந்து நிலை​யங்​களில் இருந்து கோயில் வாசல் வரை இல​வச சர்​குலர் பேருந்​துகள் தொடர்ச்​சி​யாக இயக்​கப்பட்​டன.

கடற்​கரை உள்​ளிட்ட 30 இடங்​களில் அமைக்​கப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கோபுரங்​களில் இருந்​தவாறு போலீ​ஸார் பைனாகுலர் மூலம் கூட்​டத்தை கண்​காணித்​தனர். 4 ட்​ரோன் கேம​ராக்​கள் மூலம் கடற்​கரைப் பகுதி முழு​வதும் கண்​காணிக்​கப்​பட்​டன. தீயணைப்பு மற்​றும் மீட்பு படை​யினர் மீட்பு படகு மற்​றும் மிதவை​களு​டன் கடற்​கரையில் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். மெரைன் போலீ​ஸார் படகு மூலம் ரோந்து சுற்றி வந்தனர்.

சூரசம்​ஹார விழா​வில் தமிழக அமைச்​சர்​கள் ரமேஷ், கீர்த்​தனா, ஸ்ரீநாத், மதன் ராஜா, பிரபு, இந்து சமய அறநிலை​யத்​துறை ஆணை​யர் டி.ஜி.வினய், மாவட்ட ஆட்சி​யர் விஷு மகாஜன், மாவட்ட வன அலு​வலர் இளை​யராஜா, கோயில் அறங்​காவலர் குழுத் தலை​வர் திரு​முருகன், இணை ஆணை​யர் அருணாச்​சலம், திருச்​செந்​தூர் கோட்​டாட்​சி​யர் கவுதம் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். இந்து அறநிலை​யத்​துறை​யின் சிறப்​பான ஏற்​பாட்​டால் சூரசம்​ஹார விழா வெற்​றிகரமாகவும் விமரிசையாகவும் நடந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT