கோப்புப் படம்

 
ஆன்மிகம்

திருச்செந்தூர் மாசி திருவிழா பிப். 21-ல் தொடக்கம்: மார்ச் 2-ம் தேதி தேரோட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ​திருச்செந்தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் மாசித் திரு​விழா வரும் 21-ம் தேதி கொடியேற்​றதுடன் தொடங்​கு​கிறது. முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் மார்ச் 2-ம் தேதி நடை​பெறுகிறது.

திருச்செந்தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆவணி மற்​றும் மாசி மாதங்​களில் தேர்த் திரு​விழா நடை​பெறுகிறது. இந்த ஆண்​டுக்​கான மாசித் திரு​விழா வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது.

          

அன்று அதி​காலை 5 மணிக்கு மேல் மகர லக்​னத்​தில், கோயில் செப்​புக் கொடிமரத்​தில் கொடி யேற்​றப்​பட்​டு, கொடிமரத்​துக்கு அபிஷேகம், அலங்​காரம், தீபா​ராதனை நடை​பெறுகிறது.

வரும் 25-ம் தேதி மேலக்​கோயி​லில் இரவு 7.30 மணி​யள​வில் குடைவரை வாயில் தீபா​ராதனை நடை​பெறுகிறது. 27-ம் தேதி அதி​காலை சண்​முகபெரு​மானின் உருகு சட்​டசேவை நிகழ்ச்சி நடை​பெறுகிறது.

அன்று காலை 9 மணி​யள​வில் ஆறு​முகப்​பெரு​மான் வெட்​டிவோ் சப்​பரத்​தில் பக்​தர்​களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்​ளை​யன்​கட்​டளை மண்​டபத்தை சேரு​கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம், தீபா​ராதனை நடை​பெறுகிறறு.

மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்​கச் சப்​பரத்​தில் சிவப்பு சார்த்தி கோலத்​தில் எழுந்​தருளி, வீதி​யுலா வந்து பக்​தர்​களுக்கு காட்​சி​யளிக்​கிறார். வரும் 28-ம் தேதி அதி​காலை 5 மணி​யள​வில் சுவாமி பெரிய வெள்​ளிச் சப்​பரத்​தில் வௌ்ளைச் சார்த்தி கோலத்​தில் எழுந்​தருளி திரு​வீதி வலம் வரு​கிறார்.

தொடர்ந்து மேலக்​கோயி​லில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம், தீபா​ராதனை நடை​பெறுகிறது. காலை 10.30 மணிக்கு சுவாமி பச்​சைக் கடைசல் சப்​பரத்​தில் பச்சை சார்த்தி கோலத்​தில் எழுந்​தருளி வீதி​யுலா வந்து கோயில் சேரு​கிறார்.

மார்ச் 2-ம் தேதி தேரோட்​டம் நடை​பெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, தெய்​வானை அம்​பாள் ஆகியோர் தனித்​தனி தேர்​களில் ரத வீதி​யில் வலம் வந்து அருள் பாலிகின்​றனர்.

மார்ச் 3-ம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்​சவம் நடை​பெறுகிறது. மார்ச் 4-ம் தேதி திரு​விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் தக்​கார் ரா.அருள்​முரு​கன், இணை ஆணை​யர் க.ராமு மற்​றும் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT