ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

என்.மகேஷ்குமார்

திருப்பதி: திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் பிரம்​மோற்​சவத்​தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திரு​விழா வெகு சிறப்​பாக நடை​பெற்​றது.

திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயி​லின் வரு​டாந்​திர கார்த்​திகை பிரம்​மோற்​சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இன்று 25-ம் தேதி வரை நடை​பெறும் இவ்​விழா​வில் இது​வரை தமிழகம், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா உள்​ளிட்ட பல மாநிலங்​களை சேர்ந்த பக்​தர்​கள் திரளாக கலந்​து​கொண்டு தாயாரை தரிசனம் செய்​தனர். இந்​நிலை​யில் பிரம்​மோற்​சவத்​தின் 8-ம் நாளான நேற்று காலை தேர் திரு​விழா வெகு சிறப்​பாக நடை​பெற்​றது.

காலை 9.15 மணிக்கு தொடங்​கிய இவ்​விழா​வில் பத்​மாவதி தாயார் மாட வீதி​களில் கம்​பீர​மாக பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். இதில் ஜீயர்​கள், தேவஸ்​தான அதி​காரி​கள் மற்​றும் பொது​மக்​கள் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர். பலர் தேரை வடம் பிடித்து இழுத்​தும், தேரின் மீது உப்​பு, மிளகு போன்​றவற்றை தூவி​யும் தங்​களின் நேர்த்​திக் கடனை செலுத்​தினர்.

தேரோட்​டத்தை தொடர்ந்​து, தாயாருக்கு கிருஷ்ண மண்​டபத்​தில் சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன. இரவு குதிரை வாக​னத்​தில் பத்​மாவதி தாயார் மாட வீதி​களில் எழுந்​தருளி​னார். இதி​லும் திரளான பக்​தர்​கள் பங்​கேற்று தாயாரை தரிசனம் செய்​தனர்.

இன்று கோயில் அருகே உள்ள பத்​மகுளத்​தில் பஞ்​சமி தீர்த்​தம் நிகழ்ச்சி வெகு விமரிசை​யாக கொண்​டாடப்பட உள்​ளது. நண்​பகல் 12 மணி முதல் 12.10 மணிக்​குள் சக்கர ஸ்நானம் நடை​பெற உள்​ளது.

முன்​ன​தாக விஸ்​வகேசவர், பத்​மாவதி தாயார் மற்​றும் சக்​கரத்​தாழ்​வாருக்கு பத்ம குளம் அருகே சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடை​பெறும். பஞ்​சமி தீர்த்த நிகழ்ச்​சி​யில் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் புனித நீராடு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையொட்டி விரி​வான ஏற்​பாடு​களை திரு​மலை திருப்​ப​தி தேவஸ்​தானம்​ சிறப்​பாக செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT