ஆன்மிகம்

டிச.5 முதல் 14 வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவம்

என்.மகேஷ் குமார்

திருப்பதி: திருப்பதி​யில் உள்ள தேவஸ்​தான நிர்​வாக அலுவலகத்தில், கூடு​தல் நிர்​வாக அதி​காரி டாக்​டர் ஏ.சரத் தலைமை​யில் திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கார்த்​திகை பிரம்மோற்சவ விழா ஏற்​பாடு​கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோ​சனை கூட்​டம் நேற்று நடந்​தது.

இதில் டாக்டர் சரத் பேசி​ய​தாவது: பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை பிரம்​மோற்​சவம் வரும் டிச. 5-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கி, 14-ம் தேதி பஞ்​சமி தீர்த்​தத்​துடன் நிறை வடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 முதல் 15 சதவீத பக்​தர்​கள் எண்ணிக்கை அதி​கரிக்​கும் வாய்ப்பு உள்​ளது.

எனவே, பிரம்​மோற்​சவத்​திற்கு வரும் பக்​தர்​களுக்கு போக்குவரத்து வசதி, இலவச அன்​ன​தானம், தரிசன வசதி​களை மேம்​படுத்த வேண்​டும். மேலும், பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும்.

ஆண், பெண்​களுக்​கென தனித்​தனி வரிசைகள், குடிநீர், தற்​காலிக கழிப்​பறை​கள் அமைக்க வேண்டும். மாட வீதி​கள் உட்பட திருப்​பதி மற்​றும் திருச்​சானூர் முழு​வதும் வண்ண விளக்​கு​கள் அலங்​காரம் செய்ய வேண்​டும். கோயில் மற்​றும் சுற்றுப்புறங்களில் அலங்​கார வளைவு​கள், மலர் அலங்​காரங்​கள் அமைத்​திட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT