ஆன்மிகம்

பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க முதுநிலை கோயில்களில் நேர ஒதுக்கீட்டு முறை: சோதனை அடிப்படையில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: பக்​தர்​களின் கூட்ட நெரிசலைக் குறைக்க, முது​நிலை கோயில்​களில் முதற்​கட்​ட​மாக சோதனை அடிப்​படை​யில் நேர ஒதுக்​கீட்டு முறையை அமல்​படுத்த இந்து சமய அறநிலை​யத்​துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது.

இந்து சமய அறநிலை​யத் துறை​யின் திட்​டங்​கள், செயல்​பாடு​கள் மற்​றும் தற்​போது நடை​பெற்று வரும் பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்கு அமைச்​சர் ரமேஷ் தலைமை தாங்​கி​னார்.

துறை​யின் செயலர் ஜெ.குமரகுருபரன், ஆணை​யர் பி.என்​.தர் மற்​றும் துறை​சார்ந்த உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்டனர். பக்​தர்​கள் நீண்​டநேரம் வரிசை​யில் நிற்​ப​தைத் தவிர்க்​கும் பொருட்​டு, ஆன்​லைன் டிக்​கெட் முன்​ப​திவு, நேர ஒதுக்​கீட்டு முறை, தரிசன மேலாண்மை மற்​றும் கட்​ட​ணச் சீட்டு விநி​யோகத்தை முறைப்​படுத்​துதல் குறித்து கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்தை முதற்​கட்​ட​மாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முது​நிலை கோயில்​களில் சோதனை அடிப்​படை​யில் நடை​முறைப்​படுத்​தி, பின்​னர் மாநிலம் முழு​வதும் விரிவுபடுத்​தத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், கோயில்​களுக்​குச் சொந்​த​மான நகை, சிலைகள், ஆபரணங்​கள் மற்​றும் தொன்​மை​யான பொருட்​களைப் பாது​காப்​ப​தில் எவ்​வித சமரச​மும் செய்​யக்​கூ​டாது என அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது.

கோயில் நிலங்​களை மீட்​டெடுத்​தல் மற்​றும் நீண்​ட​கால​மாகத் தீர்க்​கப்​ப​டா​மல் உள்ள இனாம் நிலம் தொடர்​பான பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காண்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கீழ் இயங்​கிவரும் பள்ளி மற்​றும் கல்​லூரி​களின் தரத்தை உயர்த்​துதல், அங்கு பயிலும் மாணவர்​களுக்​கான கட்​டமைப்பு வசதி​கள், கல்​வித் தரம்மற்​றும் இதர மேம்​பாட்​டுப் பணி​கள் குறித்து ஆய்வு செய்​யப்​பட்​டது. பக்​தர்​களுக்​கு அடிப்​படை வசதி​கள், அன்​ன​தானம், இதர நலத்​திட்​டங்​களை சிறப்​பான முறை​யில் செயல்​படுத்த அமைச்​சர் உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT