ஆன்மிகம்

மார்கழி சர்வ அமாவாசை: ராமேசுவரம் கடலில் ஆயிரக்கணக்கான பக்கர்கள் புனித நீராடல்

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மார்கழி சர்வ அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

மார்கழி சர்வ அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் வரத் துவங்கினர். வெள்ளிக்கிழமை அதிகாலையே ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்று பின் தேவாரம், திருவெம்பாவை பாடப் பெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அக்னி தீர்த்தக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடினர். நீராடிவிட்டு ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதை தொடர்ந்து ராமநாதசுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT