ஆன்மிகம்

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்!

சி.எஸ். ஆறுமுகம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்களில் தைப்பூசத்தையொட்டி திருத்தேரோட்டம் இன்று (ஜன.31) நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூரில் உள்ள பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க சுவாமி கோயிலில் இந்த விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இந்த விழா கடந்த 23-ம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.24-ம் தேதி முதல் 39-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனத்தின் வீதியுலா நடைபெற்றது.

          

பிரதான விழாவான 31-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் பஞ்சமூர்த்தி சுவாமிகளான மகாலிங்க சுவாமி, பெருநலமாமுலையம்மை அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளும், இதைத் தொடர்ந்து 9மணிக்கு மேல் 10:30 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பிப்.1-ம் தேதி காலை 10:30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபா வாகனத்தில் காவிரி ஆற்றுக்கு எழுந்தருளி மதியம் ஒரு மணிக்கு மேல் 2 மணிக்குள் தைப்பூச தீர்த்தவாரி, இரவு 10 மணிக்கு வெள்ளி ரத காட்சி நடைபெறுகிறது.

பிப்.2-ம் தேதி சந்தாவர்ணம், சுவாமி அம்பாள் திருவீதியுலா, 3- ம் தேதி சக்தி உற்சவம், 4-தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் திருவீதியுலா,5-ம் தேதி காலை 10.30க்கு ஆச்சார்யா உற்சவம், மதியம் 12 மணிக்கு சர்வ பிராய சித்தாபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் பிரவேசம் நடைபெறுகிறது. இது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலரும், திருவாவடுதுறை 2-வது குருமகா சந்நிதானம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல் தைப்பூசத்தையொட்டி ஆறுபடை வீடுகளுள் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கடந்த 23-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.24-ம் தேதி முதல் 30--ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. பிரதான விழாவான 31-ம் தேதி கோயில் உள்பிரகார திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வள்ளி தேவசேனா உடனாய சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் காட்சியளித்தனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மேலும், பிப்.1-ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமிகள் திருவீதியுலாவாக சென்று காவேரி ஆற்றில் தீர்த்தவாரி, இரவு 7.30 மணிக்குஅவரோகணம், படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா, பிப்.2-ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமிகள் யதாஸதானம் சேருதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT