ஈரோடு திண்​டல் ஸ்ரீவேலா​யுத சுவாமி கோயில் விழா​வில் ராஜ கோபுரத்​துக்கு புனிதநீர் ஊற்றி கும்​பாபிஷேகத்தை நடத்​தி​வைத்த சிவாச்​சா​ரி​யார்​கள்.

 
ஆன்மிகம்

திண்டல் வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

207 அடி உயர முருகன் சிலை அமைக்க அடிக்கல்

பா.பிரகாஷ்

ஈரோடு: திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்​பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். ஈரோடு திண்டல்​மலை வேலா​யுத சுவாமி கோயி​லில் ராஜகோபுரம், சிவன் மற்​றும் அம்​மன் சந்​நி​தி​கள், பரி​வார சந்​நி​தி​கள், புதிய நுழை​வா​யில் கட்​டு​தல் உள்​ளிட்ட திருப்​பணி​கள் மேற்கொள்​ளப்​பட்​டன. இப்​பணி​கள் நிறைவடைந்த நிலை​யில், கடந்த 16-ம் தேதி கும்​பாபிஷேக விழா தொடங்​கியது.

தின​மும் சிறப்பு பூஜைகள், ஹோமங்​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 6 கால யாக பூஜைக்​குப் பிறகு மகா கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது. ஸ்ரீவேலா​யுதசு​வாமி, அபி​ராமி அம்​மன் உடனமர் அமிர்த கடேஸ்​வரர், மூலஸ்​தான விமானம், பரி​வார விமானம், ராஜகோபுரம் மற்​றும் மூலஸ்​தான தெய்​வங்​களுக்கு புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் செய்​யப்​பட்​டது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ முழக்​கத்​துடன் வழிபட்​டனர்.

          

மாலை​யில் சிறப்பு அலங்​காரம், திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற்​றது. விழா​வில், அமைச்​சர்​கள் சு.​முத்​து​சாமி, பி.கே.சேகர்​பாபு, மாவட்ட ஆட்​சி​யர் ச.கந்​த​சாமி, எம்​எல்​ஏ-க்​கள் வி.சி.சந்​திரகு​மார், சரஸ்​வ​தி, அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் பரஞ்​சோதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். எஸ்​.பி. சுஜாதா தலை​மை​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன.

207 அடி உயர சிலை: சட்​டப்​பேர​வைக் கூட்​டத் தொடரில் ‘திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் 207 அடி உயர முரு​கன் சிலை அமைக்​கப்​படும்’ என்று தமிழக அரசு அறி​வித்​தது.

இந்​நிலை​யில், நேற்று ரூ.18 கோடி மதிப்​பில் 207 அடி உயர முரு​கன் சிலை அமைக்​கும் பணி​களுக்கு அமைச்​சர்​கள் முத்​து​சாமி, சேகர்​பாபு ஆகியோர் அடிக்​கல் நாட்​டினர். மேலும், மொடக்​குறிச்சி புஞ்சை லக்​காபுரம் செண்​பகமலை குமார​சாமி கோயி​லில் தின​மும் 25 பேருக்கு உணவளிக்​கும் அன்​ன​தானத் திட்​டத்​தை​யும் அமைச்​சர்​கள் தொடங்கி வைத்​தனர்.

SCROLL FOR NEXT