ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று முத்து திருநாரணன் கொண்டை அணிந்து, முத்து அபய ஹஸ்தம், ஸ்ரீமகாலட்சுமி பதக்கத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.

 
ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா: ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

நம்பெருமாளுக்கு இன்று மோகினி அலங்காரம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சொர்க்​க​வாசல் திறப்பு நாளை (டிச.30) அதி​காலை நடை​பெறுகிறது. இன்று (டிச.29) மோகினி அலங்​காரத்​தில் நம்​பெரு​மாள் பக்​தர்​களுக்கு சேவை சாதிக்​கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா கடந்த 19-ம் தேதி தொடங்​கியது. தொடர்ந்து பகல் பத்து உற்​சவம் நடை​பெற்று வரு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சொர்க்​க​வாசல் எனப்​படும் பரமப​த​வாசல் திறப்பு நாளை (டிச.30) அதி​காலை நடை​பெற உள்​ளது.

இதற்​காக உற்​சவர் நம்​பெரு​மாள் நாளை அதி​காலை 4.30 மணி​யள​வில் ரத்​தின அங்​கி, பாண்​டியன் கொண்​டை, கிளி​மாலை உள்​ளிட்ட திரு​வாபரணங்​கள் அணிந்து மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு வெளி​யில் வரு​வார். இரண்​டாம் பிர​காரம் வலம் வந்து நாழிகேட்​டான் வாயில் வழியே மூன்​றாம் பிர​காரத்​துக்கு வரும் நம்​பெரு​மாள், துரைப்​பிரதட்​சணம் வழி​யாக பரமப​த​வாசல் பகு​திக்கு வரு​வார்.

அதி​காலை 5.45 மணி​யள​வில் பரமப​த​வாசல் திறக்​கப்​படும். அப்​போது நம்​பெரு​மாள் பக்​தர்​கள் புடைசூழ பரமப​த​வாசலைக் கடந்​து, மணல்​வெளி, நடைபந்​தல் வழி​யாக ஆயிரங்​கால் மண்​டபத்​தின் எதிரில் உள்ள திருக்​கொட்​டகைக்கு வரு​வார். அங்கு 1 மணி நேரம் பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார்.

பின்​னர் சாதரா மரி​யாதை​யாகி, ஆயிரங்​கால் மண்​டபத்​தில் உள்ள திரு​மாமணி மண்​டபத்​தில் எழுந்​தருளி நள்​ளிரவு வரை பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார். நள்​ளிரவு 12 மணி​யள​வில் அங்​கிருந்து புறப்​பட்டு மூலஸ்​தானம் சேரு​வார்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்​றும் சுற்​றுப் பகு​தி​கள் விழாக்​கோலம் பூண்​டுள்​ளன. ஸ்ரீரங்கம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். 3 நாட்​களுக்கு போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

பகல் பத்து உற்​சவத்​தின் கடைசி நாளான இன்று (டிச.29) காலை 6 மணிக்கு உற்​சவர் நம்​பெரு​மாள் மோகினி அலங்​காரத்​தில் (நாச்​சி​யார் திருக்​கோலம்) மூலஸ்​தானத்​திலிருந்து புறப்​பட்டு அர்ச்​சுன மண்​டபத்தை சென்​றடை​வார்.

அங்கு சிறப்பு ஆராதனை​கள் நடை​பெறும். மாலை 5 மணிக்கு மேல் நான்​காம் பிர​காரம் வலம் வந்து கருட மண்​டபத்​தில் பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார்.

இரவு 7 மணிக்கு மேல் ஆழ்​வார், ஆச்​சார்​யர்​கள் மரி​யாதை​யான பின் 8.30 மணி​யள​வில் மூலஸ்​தானம் சேரு​வார். விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில், பட்​டர்​கள், ஸ்தானீகர்​கள், கைங்​கர்​யபரர்​கள், அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் உபய​தா​ரர்​கள் உள்​ளிட்​டோர் செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT