ஆன்மிகம்

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மேளவாத்திய இசையுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம்

செய்திப்பிரிவு

தூத்​துக்​குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா​வில், சூரசம்​ஹாரம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடை​பெற்​றது. சூரபத்​மனை வதம் செய்த சுவாமி ஜெயந்தி நாதரை, கடற்​கரையில் திரண்​டிருந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க தரி​சித்​தனர்.

அறு​படை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில், கந்த சஷ்டி திரு​விழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்​கியது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சூரசம்​ஹாரம் நேற்று நடை​பெற்​றது. அதி​காலை 1 மணிக்கு நடை திறக்​கப்​பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்​தாண்ட அபிஷேகம், இதர கால பூஜைகள் நடை​பெற்​றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்​கின.

காலை 9 மணிக்குப் பூர்​ணாஹுதி தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி, அம்​மனுக்கு அபிஷேகம், அலங்​காரம் நடை​பெற்​றது. பகலில் மூல​வருக்கு உச்சி கால தீபாராதனையும், யாக சாலை​யில் சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடை​பெற்​றது. பின்​னர் தங்க சப்​பரத்​தில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலை​யில் இருந்து புறப்​பாடாகி, பக்​தர்​கள் வேல் வகுப்பு, வீர​வாள் வகுப்பு பாடல்​கள் பாட, மேளவாத்​திய இசையுடன் சண்​முக​வி​லாசம் சென்று சேர்ந்​தார். அங்கு தீபாராதனையைத் தொடர்ந்து, பிற்​பகல் 2 மணி​யளவில் திரு​வாவடு​துறை ஆதீன சஷ்டி மண்​டபத்​தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்​காரம் நடை​பெற்​றது.

பிற்​பகல் 3.50 மணி​யளவில் சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்​மனை வதம் செய்ய போர்க்​கோலம் பூண்டு சஷ்டி மண்​டபத்​தில் இருந்து கடற்​கரைக்​குப் புறப்​பட்​டார். அங்கு சூரசம்​ஹாரம் தொடங்​கியது. முதலில் கஜ முகத்​துடன் வந்த சூரபத்​மன், சுவாமியை ஆணவத்​தோடு 3 முறை வலம் வந்து போரிட்​டான். மாலை 4.15 மணிக்கு ஜெயந்தி நாதர் அவனை தனது வேலால் வதம் செய்​தார்.

இரண்​டாவ​தாக சிங்க முகத்​துடன் வந்த சூரபத்​மனை, மாலை 4.37 மணிக்​கும், மூன்​றாவ​தாகச் சுயரூபத்​துடன் போரிட்ட சூரபத்​மனை 4.53 மணிக்​கும் சுவாமி வதம் செய்​தார். பின்​னர் மாமர​மாக உரு​வெடுத்த சூரனை பிளந்து சேவலாகவும், மயி​லாகவும் சுவாமி ஆட்​கொண்​டார்.

அப்​போது கடற்​கரையில் திரண்​டிருந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் ‘வெற்​றிவேல் முருக​னுக்கு அரோகரா’ என்று பரவசத்​துடன் முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர். பின்​னர் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்​தனர்.

சூரசம்​ஹாரம் முடிந்​ததும் வள்ளி, தெய்​வானையுடன் சுவாமி ஜெயந்தி நாதர் சந்​தோஷ மண்​டபத்​தில் எழுந்​தருளினார். அங்கு சுவாமிக்​கும் அம்​பாளுக்​கும் தீபாராதனை நடை​பெற்​றது. தொடர்ந்து சுவாமி பூஞ்​சப்​பரத்​தில் கிரி​பிரகாரம் உலா வந்து கோயில் சேர்ந்​தார். இர​வில் 108 மகாதேவர் சந்​நிதி முன்பு சுவாமிக்​குச் சாயா அபிஷேகம் நடை​பெற்​றது.

தென்​மண்​டல ஐஜி விஜயேந்​திர பிதரி, திருநெல்​வேலி சரக டிஐஜி திருநாவுக்​கரசு, தூத்​துக்​குடி எஸ்.பி. சிவபிரசாத் தலை​மையில் 4,100 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். கந்த சஷ்டி விழா​வின் 7-ம் நாளான இன்று (நவ.16) சுவாமி குமர​விடங்​கப் பெரு​மான் - தெய்​வானை அம்​பாள் திருக்​கல்​யாணம் நடை​பெறுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT