நாகூர் ஆண்டவர் தர்காவில் 470-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு நடந்த சந்தனக்கூடு ஊர்வலம்.

 
ஆன்மிகம்

470-வது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகூர் ஆண்​ட​வர் தர்​கா​வில் 470-வது ஆண்டு கந்​தூரி விழாவை முன்​னிட்டு இன்று (நவ.20) அதி​காலை சந்​தனம் பூசும் நிகழ்வு கோலாகலமாக நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர்.

நாகை மாவட்​டம் நாகூர் ஆண்​ட​வர் தர்​கா​வில் நாகூர் ஆண்​ட​வர் சாகுல்​ஹமீது காதிர் நாயகம் மறைந்த நாளை​யொட்டி, கந்​தூரி விழா ஆண்​டுதோறும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, 470-வது கந்​தூரி விழா நவ.10-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தொடர்ந்து, சிறப்​புத் தொழுகைகள், வழிபாடுகள் நடை​பெற்று வந்​தன.

விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சந்​தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (நவ.20) அதி​காலை நடை​பெற்​றது. இதை முன்​னிட்டு தாபூத்து என்​னும் சந்​தனக்​கூடு ஊர்​வலம் நேற்று மாலை நாகை​யில் இருந்து தாரை, தப்​பட்​டைகள் முழங்க புறப்​பட்​டது. நாகை புதுப்​பள்​ளித் தெரு, யாஹூசைன் தெரு, நூல்​கடை தெரு, வெங்​காயகடைத் தெரு, பெரிய கடைத் தெரு, சர் அகமது தெரு உள்​ளிட்ட தெருக்​களில் ஊர்​வலம் பவனி வந்​தது.

பின்​னர், அண்ணா சிலை, பொது அலு​வலக சாலை வழி​யாக சென்ற சந்​தனக்​கூடு ஊர்​வலம் இன்று அதி​காலை நாகூரை வந்​தடைந்​தது. இந்த ஊர்​வலத்​தின்​போது நாகை முதல் நாகூர் வரை வீதி​களில் அனைத்து மதங்​களை​யும் சேர்ந்த ஆயிரக்​கணக்​கானோர் திரண்டு நின்று பூக்​களை தூவி சந்​தனக்​கூடை வரவேற்​றனர்.

சந்​தனக்​கூடு ஊர்​வலம் நாகூர் வந்​தடைந்​ததும் அங்​குள்ள கூட்​டுப் பாத்​திகா மண்​டபத்​தில் பாத்​திகா ஓதி, பின்​னர் நாகூர் பெரிய கடைத் தெரு, ரயிலடி

தெரு, நூல்​கடைத் தெரு வந்து அங்​குள்ள பாரம்​பரிய முறைக்​காரர் வீட்​டில் சந்​தனக் குடத்தை வாங்கி, கூட்​டில் வைத்து தர்​கா​வுக்கு கொண்டு வரப்​பட்​டது. இதையடுத்து, அதி​காலை சந்​தனக்​குடங்​கள் தர்​கா​வில் உள்ள ஆண்​ட​வரின் சமாதி அறைக்கு கொண்டு செல்​லப்​பட்டு, துவா ஓதி ஆண்​ட​வர் சமாதிக்கு சந்​தனம் பூசும் நிகழ்ச்சி நடந்​தது. இந்​நிகழ்​வில் ஏராளமானோர் கலந்​து​கொண்​டனர்.

நாளை (நவ.21) மாலை கடற்​கரையில் பீர் ஏகுதல் நிகழ்ச்சி நடை​பெறும். அதைத்​தொடர்ந்து, நவ.23-ம் தேதி கொடி இறக்​கத்​துடன் கந்​தூரி விழா நிறைவடைகிறது. சந்​தனம் பூசும் வைபவத்தை முன்​னிட்டு இன்று (நவ.20) நாகை மாவட்​டத்​துக்கு உள்​ளூர் விடு​முறை அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT